அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேறு கட்சிக்கு தாவியதால், அதிமுகவின் கோட்டையாக இருந்த கோபிசெட்டிபாளையம் தொகுதி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவான களமாக மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையனை எதிர்த்து அதிமுக வேட்பாளரை களமிறக்கி தோல்வியை தழுவினால் டேமேஜ் ஆகும் என யோசிக்கும் EPS, வருகிற தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தள்ளி விட யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுறுசுறுப்பாக இயங்கி வரும் செங்கோட்டையன்அதிமுகவில், அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் ஐக்கியமானார். இளைஞர்கள் பட்டாளம் நிறைந்த த.வெ.க.வில் சீனியராக ஐக்கியமான செங்கோட்டையனுக்கு, நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. த.வெ.க.வில் இணைந்ததில் இருந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிபாளையம் தொகுதியை த.வெ.க.வுக்கு ஆதரவாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.அனைவரையும் ஒருங்கிணைத்து வேலைகோபிசெட்டிபாளையம் தொகுதியில் எட்டு முறை போட்டியிட்டு MLA ஆன செங்கோட்டையனுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் இருந்த செங்கோட்டையன் மீது, கோபிசெட்டிபாளையம் தொகுதி மக்களும் நல்ல அபிப்ராயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையனின் கோட்டையாக மாறியது. இந்த டிராக் ரெக்கார்டை தக்க வைக்க, செங்கோட்டையன் தரப்பு கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பம்பரமாய் சுழன்று பணி செய்ய தொடங்கியிருக்கிறதாம். அதிமுகவில்இருந்த போது தனது ஆதரவாளர்களாக இருந்தவர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் என அனைவரையும் ஒருங்கிணைத்து வேலை செய்து வருகிறாராம் செங்கோட்டையன்.அதிமுக வேட்பாளர் யார்?இந்த நிலையில் தான், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையனுக்கு எதிராக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என உள்ளூர் அதிமுகவில் மிகப்பெரிய ஆலோசனையே நடந்திருக்கிறது என்கிறார்கள். அந்த வகையில் அதிமுக நகர செயலாளராக இருக்கும் பிரினியோ கணேஷ், அம்மா பேரவை இணை செயலாளராக இருக்கும் EPS-ன் உறவினரான சசிபிரபு, திமுகவில் இருந்து விலகி அதிமுகவுக்கு வந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வன் ஆகிய 3 பேர் பட்டியலில் இருக்கும் நிலையில், அதில் யாராவது ஒருவர் களம் காண வாய்ப்பு என சொல்லப்படுகிறது. தவெக VS பாஜகஇது ஒரு பக்கம் இருந்தாலும், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இன்னும் செங்கோட்டையனுக்கு ஆதரவு இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக அதிமுக வேட்பாளரை நிறுத்துவது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பதும் அதிமுகவின் யோசனையாக இருக்கிறதாம். செங்கோட்டையனுக்கு எதிராக களம் காணும் அதிமுக வேட்பாளர் தோற்றுப் போனால் விமர்சனத்திற்கு தீனி போட்டது போல ஆகிவிடும் என கருதும் எடப்பாடி பழனிசாமி, கோபிசெட்டிபாளையம் தொகுதியை பாஜக பக்கம் தள்ளிவிட யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. கோபிசெட்டிபாளையம் தொகுதி பாஜக பக்கம் செல்லும் பட்சத்தில் அது த.வெ.க. வெர்சஸ் பாஜக என்ற போட்டியாக மாறும். செங்கோட்டையன் முன் இருக்கும் சவால்இதற்கிடையே திமுக தரப்பிலும் வேட்பாளர் களம் காண்பார் என்பதால் போட்டி கடுமையாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு செங்கோட்டையனை ஜெயிக்க வைத்த கோபிசெட்டிபாளையம் மக்கள், இனிமேல் விசில் சின்னத்தில் ஓட்டுப் போடுவார்களா? என்பது தான் செங்கோட்டையன் முன்னாடி இருக்கும் சவால். Related Link இன்றைய ராசி பலன்கள் 07022026