Also Watch
Read this
By: Pari karthick

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 86 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணை திறக்கப்படாததன் காரணமாக ஆழ்துளைக்கிணறு வைத்திருப்பவர்கள் மட்டும் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்று வட்டார பகுதிகளில் நெல் பயிர்களில் செம்பேன் பூச்சி தாக்குதல் காரணமாக நெல் பயிர்கள் பதறாக மாறி வருகிறது.
குறிப்பாக நன்னிலம் திருக்கண்டீஸ்வரம் சோத்தக்குடி செம்பியமிழலை பணங்குடி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நெல் பயிர்களில் செம்பேன் பூச்சி தாக்குதல் காரணமாக பயிர்கள் அனைத்தும் பதறாக மாறி வருகிறது. இதன் காரணமாக மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரு ஏக்கருக்கு இதுவரை 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பூச்சி தாக்கத்தின் காரணமாக பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து என்ன மாதிரியான பூச்சி மருந்து அடிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved