news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முறையான பேருந்து வசதி இல்லாததை கண்டித்து போராட்டம்
tv

Also Watch

முறையான பேருந்து வசதி இல்லாததை கண்டித்து போராட்டம்

சாலை மறியலில் ஈடுபட்டனர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
போராட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு அருகே மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 950 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்லூரிக்கு செல்வதற்கு முறையான பேருந்து வசதி இல்லாத நிலையில் தினமும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே கல்லூரி வரை பேருந்து இயக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ மாணவிகள் மணப்பாறை
துவரங்குறிச்சி சாலையில் சமத்துவபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை எடுத்து மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Link
வருமானத்தை தாண்டி வரி? அதிகாரிகள் கணக்கில் ஆயிரம் குளறுபடி

வருமானத்தை தாண்டி வரி? அதிகாரிகள் கணக்கில் ஆயிரம் குளறுபடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved