news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதுச்சேரி பாஜக மகளிர் அணி அராஜகம்
tv

Also Watch

tv

Read this

புதுச்சேரி பாஜக மகளிர் அணி அராஜகம்

புதுச்சேரி

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புதுச்சேரியில் மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா, பாஜகவை கண்டித்து அக்கட்சியின் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திவிட்டு சென்ற பின்னர், பாஜக மகளிர் நிர்வாகிகள் இஸ்லாமிய பெண் தலைவி அமர்ந்த இடத்தை மஞ்சள் கலந்த நீரை தெளித்து சுத்தப்படுத்திய அட்டூழியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை வீடியோவாகவும் வெளியிட்டு பாஜக மகளிர் நிர்வாகிகள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

* டெல்லி ஏஐ மாநாட்டிற்குள் புகுந்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்
* புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு பாஜக ஆர்ப்பாட்டம்
* ஏஐ மாநாட்டில் காங். நடத்திய போராட்டத்தை கண்டித்து பாஜக முற்றுகை


டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டிற்குள் புகுந்து இளைஞர் காங்கிரசார், அரை நிர்வாண போராட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக இளைஞர் அணி நிர்வாகிகள், ராகுல்காந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.

* காங்கிரசாரும் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
* இஸ்லாமிய பெண் நிர்வாகியும் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பு
* காங்கிரஸ் பெண் நிர்வாகி புறப்பட்ட பின்னர் பாஜகவினர் அநாகரிக செயல்


இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிள்ளைச்சாவடி சந்திப்பு பகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடி, பாஜக அலுவலகத்திற்கு சென்று பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்ததோடு, பாஜகவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

* இஸ்லாமிய பெண் நிர்வாகி அமர்ந்த இடத்தை மஞ்சள் நீரால் கழுவினர்
* காது கூசும் ஆபாச வார்த்தைகளால் வசைபாடினர்


மகிளா காங்கிரஸ் தலைவி நிஷாவும் பாஜகவை கண்டித்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டார். காங்கிரஸ் பெண் நிர்வாகி போராட்டத்தில் ஈடுபட்டு, புறப்பட்டு சென்ற பின்னர், அங்கு வந்த பாஜக பெண் நிர்வாகிகள், அவரை கடும் சொற்களால் காது கூசும் அளவுக்கு ஆபாசமாக வசைப்பாடினர். இதுதொடர்பான வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.

* நாகரிகமற்ற செயலை செய்து விட்டு அதை வீடியோவாக வெளியிட்ட பாஜக
* பாஜக மகளிரணியினர் செய்த அநாகரிக செயலுக்கு வலுக்கும் கண்டனம்


காங்கிரசை சேர்ந்த இஸ்லாமிய பெண் நிர்வாகியை வசை பாடியது மட்டுமின்றி, அவர் அமர்ந்து போராட்டம் நடத்திய இடத்தின் மீது மஞ்சள் கலந்த நீரை தெளித்து சுத்தம் செய்வதாக கூறி, அராஜகத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு அட்டூழியத்தை அரங்கேற்றி விட்டு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டு அராஜகத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் நிர்வாகிகளுக்கு கண்டனம் வலுத்துள்ளது.

Related Link
யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

       

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதல் ட்ரோன் உற்பத்தி 10 மடங்காக அதிகரிப்பு

1
15 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved