news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சூரஜின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்த உறவினர்கள்
tv

Also Watch

tv

Read this

சூரஜின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்த உறவினர்கள்

சேலம்

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM TVK

உடலை வாங்க மறுப்பு :

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இதுவரை ஆறுதல் மற்றும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உதவி அளிப்பது தொடர்பாக உறுதியோ அளிக்கவில்லை என புகார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் ஸ்ரீமந்த் பூஜிபால் (34) இவர் சேலம் சிவசக்தி நகரில் கடந்த 13 வருடங்களாக தங்கி வெள்ளிப் பட்டறை வேலை செய்து வந்துள்ளார். நேற்றைய தினம் அவரது நண்பர் மோகன்ராவ் இருவரும் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கு சூரஜிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சூரஜ் உயிரிழந்தார்.

இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் உடற்கூறு ஆய்வு முடிந்து உறவினரிடம் உடலை ஒப்படைக்க முயன்ற போது சூரஜ் உடலை வாங்க அவருடைய உறவினர்கள் மருத்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இதுவரை உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என்றும் மனைவி மற்றும் குழந்தைகளை வைத்து தவித்து வரும் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி வழங்க உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சூரஜ் உடலை உறவினர்கள் வாங்க மறுத்துள்ளனர்.

Related Link
திமுக ஆட்சியை அகற்றுவது தான் கனவு - விஜய் பேச்சு

திமுக ஆட்சியை அகற்றுவது தான் கனவு - விஜய் பேச்சு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதலமைச்சர் பியூஷ் கோயலுக்கு பகிரங்க சவால்..!!

2
1 hr 16 mins agoshare
CM Speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved