Also Watch
Read this
By: Manigandan Raja

பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை :
மத்திய அரசு நிறுவனமான ஜிப்மரில் 450கும் தினக்கூலி ஊழியர்கள் கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
மேலும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் இரண்டு முறை உத்தரவிட்டும் நிர்வாகம் நடவடிக்கை
எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 90 நாட்களில் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் ஜிப்மர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.3 மாதங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த ஜிப்மர் நிர்வாகம் தற்போது மேல் முறையீடு செய்துள்ளது ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஜிப்மர் இயக்குநர் அலுவலகம் முன்பு ஒன்று சேர்ந்து ஊழியர்கள் அலுவலக வளாகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோரிமேடு போலீசார் ஊழியர்களை கலைந்து போக சொன்னதால் ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் எழுத்து பூர்வமாக கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பணி நிரந்தரம் செய்யாவிட்டால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை குடும்பத்துடன் புறக்கணிப்போம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved