news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.3 கோடி விற்பனையாகும் ஆனா இப்போ ரூ.1 கோடி தான்...
tv

Also Watch

tv

Read this

ரூ.3 கோடி விற்பனையாகும் ஆனா இப்போ ரூ.1 கோடி தான்...

மதுரை

13

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mlr 2

மேலூரில் ரம்ஜான் பண்டிகையொட்டி 1 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானாலும் தேர்தல் நடைமுறை காரணமாக பணம் கொண்டு வர முடிவதில்லை என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி களைக்கட்டிய ஆடுகள் விற்பனை
மேலூரில் உள்ள சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கால்நடை வாரச்சந்தை நடைபெறுகிறது. இதில் திங்கள்கிழமை தோறும் ஆடு மற்றும் கோழி விற்பனைக்கான சந்தை நடைபெற்று வரும் நிலையில், வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதால் ஆடுகள் விற்பனை களைகட்டி உள்ளது.

ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை
இதற்காக, மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகள் மற்றும் கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதனை வாங்குவதற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகள் வாங்க வந்திருந்தனர்.இதில், ஒரு ஆட்டின் விலை அதன் எடையைப் பொறுத்து 8,000 முதல் 12,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை இந்த சந்தையில் 1 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.

வியாபாரிகள், விவசாயிகள் கவலை
தற்பொழுது, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளதால், வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் பெருமளவில் பணம் கொண்டு வர முடியாமல், வர்த்தகம் மந்தமான நிலையிலேயே சென்று கொண்டிருப்பதாகவும், பண்டிகை காலங்களில் 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் இடத்தில் தற்போது, 1 கோடி ரூபாய் வரை மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலையோடு தெரிவித்தனர். மேலும் வியாபாரிகள் பெருமளவில் ஆடுகளை வாங்கும்போது அட்வான்ஸ் தொகையை மட்டும் செலுத்தி விட்டு மீதி பணத்தை "ஆன் லைன்" மூலம் பண பரிவர்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Link
அழுது மன்றாடும் இளம்பெண்

அழுது மன்றாடும் இளம்பெண்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

1
9 hrs 59 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved