Also Watch
Read this
கரூரில், 17 வயது பள்ளி மாணவி கொ* வழக்கில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட நெய் வியாபாரி போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது தவறி கீழே விழுந்ததில் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

இளம் பெண்ணுடன் காதல்
கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்த கறி வெட்டும் தொழிலாளியின் மகளான இளம்பெண், அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வந்தார். அந்த கடைக்கு நெய் விநியோகம் செய்துவந்த வியாபாரி மோகன்ராஜ், தனக்கு திருமணமானதை மறைத்து அந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த சூழலில், கடந்த மாதம் 17ஆம் தேதி இரவு அந்த இளம்பெண்ணை பார்ப்பதற்காக சென்ற மோகன்ராஜ், வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

வந்தது பள்ளி சிறுமி
ஆனால், கதவை திறந்தது அந்த இளம்பெண்ணின் தங்கையான பிளஸ்-2 படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி. யார் நீங்க? எதற்காக வந்தீங்க? என கேள்வி எழுப்பிய சிறுமி, இருங்க எங்க அப்பாவை கூப்பிடுறேன் என கூறியதும், பதற்றமடைந்த மோகன்ராஜ், கதவின் அருகே கிடந்த கறிவெட்டும் கத்தியை எடுத்து சிறுமியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அந்த சிறுமி மயக்கமடைந்து கீழே விழுந்து உள்ளார்.

மயங்கி கிடந்த சிறுமியிடம்...
சற்றும் தாமதிக்காத அந்த காமுகன், மயங்கிக் கிடந்த சிறுமியை ஈவு இரக்கமே இல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான். இதனால் மயக்கம் தெளிந்த அச்சிறுமி, கூச்சலிட முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த காமுகன் மோகன்ராஜ், கறிவெட்டும் கத்தியால் அச்சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளான். பாவம், அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

முட்புதரில் வீசிய கொடூரம்
ஆனால், அந்த காமுகனோ சற்றும் பதற்றப்படாமல், அங்கு கிடந்த கறிவெட்ட பயன்படுத்தும் பாய் மற்றும் துணிகளால் அச்சிறுமியை மூட்டை போல கட்டி, தாம் வந்த இரு சக்கர வாகனத்தில் வைத்து கட்டி, வெங்கமேடு அருகே புதூர் சாலை பகுதியில் வாய்க்கால் அருகேயுள்ள முட்புதரில் வீசிவிட்டு எதுவுமே நடக்காததுபோல சென்று விட்டான்.

ஒரு மாதமாக...
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மகளை காணாதது கண்டு பெற்றோர் திகைப்படைந்தனர். பின்னர், இதுகுறித்து போலீஸில் புகார் அளித்த நிலையில், கடந்த ஒரு மாதமாக போலீஸார் விசாரித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனவே, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரிடமே துருவி துருவி விசாரிக்கத் தொடங்கினர்.

எலும்புக்கூடு கிடைத்தது
அப்போதுதான், சிறுமியின் அக்காவை நெய் வியாபாரி மோகன்ராஜ் காதலித்த விவரம் தெரியவந்து, அவனை பிடித்து முறைப்படி விசாரித்தனர். விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொ* செய்தது உட்பட நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மோகன்ராஜ் விலாவாரியாக கக்கிவிட்டான். இதன்பிறகு, புதூர் பகுதி புதரில் தேடியபோது, சிறுமியின் எலும்புக்கூடு தான் கிடைத்தது.

கை, கால் முறிவு
எலும்புக் கூட்டை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், கழுத்தில் காயம் இருந்ததும் தெரிய வந்தது. பின்னர், மோகன்ராஜை கைது செய்து அழைத்துச் சென்றபோது அவன் போலீஸாரிடமிருந்து தப்பியோடி உள்ளான். அப்போது, தவறி கீழே விழுந்ததில் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே, அவனை மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொ* செய்யப்பட்டு, எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved