Also Watch
Read this
By: Fyrose Banu

திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு புனித சந்தியாகப்பர் தேவாலய ஆண்டு திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட மின்ரதம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி விமர்சையாக நடைபெற்றது. ஏ.வெள்ளோடு கிராமத்தில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் தேவாலய ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து 15 ஆம் தேதி புதுமைகளை வழங்கும் புனித சந்தியாகப்பர் தேவாலயத்தில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் வெள்ளோடு மற்றும் சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டு புனித சந்தியாகப்பருக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அணிவித்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். ஆலயத்தில் ஆயிர கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டுச் சென்றனர்.

இதனை தொடர்ந்து இரவு 12 மணி அளவில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித சந்தியாகப்பாரின் மின்ரதம், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதம் மற்றும் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட ரதங்கள் என 20க்கும் மேற்பட்ட மின்ரதங்கள் மேளதாளம் முழங்க இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் விண்ணதிர வானவேடிக்கையுடன் ஊர்வலமாக புனித சந்தியாகப்பரின் கிராமத்தின் முக்கிய சாலைகளில் தேர்பவனி உலா வந்தது. 
இதற்கு முன்னர் பாரம்பரிய முறைப்படி இந்து மதத்தைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களுக்கு மேளதாளத்துடன் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வண்ண விளக்குகளால் தேவாலயம், மற்றும் மின் ரதங்கள் ஜொலித்தது. இத்திருவிழாவிற்கு வெள்ளோடு மற்றும் அதன் சுற்று பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு புனித சந்தியாகப்பரின் ஆசீர் பெற்றுச் சென்றனர். பாரம்பரியமிக்க ஊர் மணியம், நாட்டாண்மை, பொருளாளர் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved