Also Watch
Read this
By: Manigandan Raja

வரதராஜ பெருமாள் கோவிலில் வீதி உலா :
சென்னை திருவெற்றியூர் காலடிப்பேட்டை ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு ஒன்பது நாள் உற்சவம் கோதண்ட ராமருக்கு கர்ப்ப உற்சவம் நடைபெற்று வரும் நிலையில்
இன்று ஏழாம் நாள் உற்சவத்தில் உற்சவ மூர்த்திகளான ராமபிரானுக்கு பால் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதி உலா மிக விமர்சையாக நடைபெற்றது.
வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் சப்ரத்தில் ஸ்ரீ ராமபிரான் சீதாதேவி லட்சுமணர் எழுந்தருளினர் நாதஸ்வர மேளம் மங்கல வாத்தியங்களுடன் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு தீப ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் திருத்தேர் சப்பரத்தில் வீற்றிருக்க வைத்து.
கோவிந்தா கோபால ராமா என பக்தி கோஷங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சுவாமி கோபுர வாசல் வழியாக ஆரத்தி உடன் நான்கு கால் மண்டபம் அருகில் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு தீப ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் சன்னதி தெரு, வடக்கு மாட வீதி மேற்கு மாட வீதி என நான்கு மாட வீதி உலா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷமிட்டு ஸ்வாமி வீதி உலா ஏராளமான
பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved