news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார ஆய்வாளர் ஆய்வு
tv

Also Watch

tv

Read this

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார ஆய்வாளர் ஆய்வு

ஆத்தூர், சேலம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10 வாகனங்கள் தகுதி நீக்கம்

வட்டார ஆய்வாளர் ஆய்வு  : 

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வளாகப் பகுதியில் தனியார் பள்ளி வாகனங்களை ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஜூன் ஒன்றாம் தேதி தமிழக முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளிகளின் வாகனங்களில் தரம் குறித்தும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளியில் 711 வாகனங்களில் முதற்கட்டமாக 300 பேருந்துகள், வேன்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது சென்சார் மானிட்டர் இல்லாத வாகனங்கள் பாதுகாப்பு குறைபாடு, அவசர வழி கதவு இயங்காத பத்து வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் தகுதி நீக்கம் செய்து மீண்டும் சீரமைத்து காண்பிக்க அறிவுறுத்தினார்.

முன்னதாக வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு விபத்துக்கள் ஏற்படும்போது முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆய்வின்போது ஆத்தூர் டிஎஸ்பி சத்யராஜ்,வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Link
7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்

7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எடப்பாடி பழனிசாமிக்கு ஒத்துழைப்பு - அதிமுக தீர்மானம்

3
18 mins agoshare
எடப்பாடி பழனிசாமிக்கு ஒத்துழைப்பு - அதிமுக தீர்மானம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved