Also Watch
Read this
By: Manigandan Raja

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் 72, என்பவர் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி அடுத்த மதினா மஜித் அருகே சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் ரியாஸ் பலத்த காயமடைந்த சாலையில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறப்பு சிங்க படை பெண்கள் ஆம்பிலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அவ்வழியாக வந்த கிருஷ்ணகிரி தவெக எம் எல் ஏ முகுந்தன் விபத்தில் சிக்கிய நபருக்கு முதலுதவி அளித்தார்.

ஆனால் ஆம்பிலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் படுகாயம் அடைந்த நபரை எல் எல் ஏ முகுந்தன் தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலையில் விபத்தில் சிக்கிய நபரை ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் MLA தனது காரில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved