நீலகிரி மாவட்டம் உதகை அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்திலுள்ள வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் பணிபுரிந்து வரும் குன்னூரை சேர்ந்த லெனின் என்பவர், தனது தாயுடன் பெங்களூருவிலிருந்து புறப்பட்டு உதகை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கார் பிங்கர் போஸ்ட் பகுதிக்கு வந்த போது முன் சக்கர டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த பைக் மீது மோதி அருகில் பள்ளத்தில் இருந்த வீட்டின் கூரை மீது விழுந்தது.