news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சேலத்தில் நள்ளிரவில் பயங்கரம், வெறும் 22 நிமிடங்களில் அரங்கேறிய சம்பவம்
tv

Also Watch

சேலத்தில் நள்ளிரவில் பயங்கரம், வெறும் 22 நிமிடங்களில் அரங்கேறிய சம்பவம்

ரூ.13.20 கோடி வெள்ளிப்பொருட்கள் கொள்ளை

32

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் பள்ளப்பட்டி பகுதியில், நள்ளிரவில் காவலாளியை இரும்பு ராடால் கொடூரமாகத் தாக்கிவிட்டு, மின்னல் வேகத்தில் வெறும் 22 நிமிடங்களில் 13 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளது. சினிமா பாணியில் அரங்கேறிய இத் துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி பட்டறையில்...
சேலம் பள்ளப்பட்டி, சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் சொந்தமாக வெள்ளிப் பட்டறை நடத்தி வரும் நிலையில், பட்டறையின் இரவு நேரக் காவலாளியாக குமரன் நகர் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

வழக்கம்போல் பட்டறையின் பணிகள் முடிந்து காவலாளி வெங்கடேசன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

4 பேர் கொண்ட மர்ம கும்பல்
அதிகாலை சுமார் 1:30 மணியளவில், வெள்ளை நிற காரில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து இறங்கியது. தங்களின் கார் யாருடைய கண்ணிலும் படக்கூடாது என்பதற்காக, மிகவும் சாதுரியமாகப் பட்டறையின் பின்னால் உள்ள ஒரு கார் ஷெட்டின் பூட்டை உடைத்த அந்த கும்பல், காரை உள்ளே கொண்டு சென்று மறைவாக நிறுத்தி விட்டு, பின்னர் பட்டறையின் பின்பக்கச் சுவர் வழியாக உள்ளே நுழைந்துள்ளது.

பணியில் இருந்த காவலாளி வெங்கடேசன் சத்தம் கேட்டு அவர்களைத் துணிச்சலுடன் தடுக்க முயன்றபோது, அந்த கும்பல் தங்களது கையில் வைத்திருந்த இரும்பு ராடால் காவலாளியின் தலையில் ஓங்கி கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் மண்டை உடைந்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

சுமார் ரூ.13 கோடியே 20 லட்சம்
காவலாளியை வீழ்த்திய அந்த கும்பல் பட்டறையின் பிரதான கதவின் பூட்டுகளை மளமளவென்று உடைத்து உள்ளே புகுந்து, கபோர்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெள்ளி அரைஞாண் கயிறு, கால் கொலுசு, மெட்டி, தண்டை உள்ளிட்ட அனைத்து வெள்ளிப் பொருட்களையும் வாரிச் சுருட்டியது.

பின்னர் ஒட்டு மொத்தப்பொருட்களையும் தங்களது காரில் ஏற்றியவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளிப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.13 கோடியே 20 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மிகவும் சாதுரியமாகச் செயல்பட்ட கொள்ளையர்கள் போலீசாரிடம் மாட்டாமல் இருக்க, சம்பவ இடத்தில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களின் மீதும் ஸ்பிரே அடித்து காட்சிகளை மறைத்துள்ளனர். மேலும், தங்களின் உருவம் பதிவாகியிருக்கும் என்ற பயத்தில், கண்காணிப்புக் கேமராவின் காட்சிகளைச் சேமிக்கும் டிவிஆர் கருவியின் ஒயர்களைத் துண்டித்து, அந்த டிவிஆர் பெட்டியையும் தங்களுடன் எடுத்துச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

சிசிடிவி காட்சியில்...
கொள்ளையர்கள் புத்திசாலிதனமாக பட்டறையின் டிவிஆரை எடுத்துச் சென்றபோதிலும், அந்த பட்டறையின் பின்புறம் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், வெள்ளை நிறக் காரில் கொள்ளையர்கள் வந்து இறங்குவது, நோட்டமிடுவது, பூட்டை உடைப்பது மற்றும் 22 நிமிடங்களில் கொள்ளையடித்து விட்டுத் தப்புவது போன்ற பகீர் காட்சிகள் அச்சுபிசகாமல் பதிவாகியுள்ளன.

இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தப்பியோடிய 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
மகாராஷ்டிராவில் சுளுக்கெடுத்த தனிப்படை, கம்பி எண்ணும் ரவுடி கும்பல்

மகாராஷ்டிராவில் சுளுக்கெடுத்த தனிப்படை, கம்பி எண்ணும் ரவுடி கும்பல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக அரசு மீது செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved