news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வனத்தை விழுங்கும் கல் குவாரிகள், மிரட்டலில் நடுங்கும் கிராமம்
tv

Also Watch

வனத்தை விழுங்கும் கல் குவாரிகள், மிரட்டலில் நடுங்கும் கிராமம்

வண்ணாத்தி கரடு மலையின் பரிதாபம்

52

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே இயற்கையின் அரணாக திகழ்ந்த வண்ணாத்திக் கரடு மலை, தனியார் கல்குவாரிகளின் அசுர வேட்டையால் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. காப்புக் காடுகளின் விதிகளை தவிடுபொடியாக்கி விட்டு இயங்கும் சட்டவிரோதக் குவாரிகளின் பின்னணியில் என்ன நடக்கிறது? அதிரவைக்கும் கள நிலவரங்கள் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

வரலாற்று சிறப்பு மிக்கது
மதுரை மாவட்டம் கொண்டையம்பட்டி கிராமத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது வரலாற்று சிறப்புமிக்க வண்ணாத்தி கரடு மலை. இந்த பகுதியில் வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக தேசிய நெடுஞ்சாலையில் பிரத்யேகமாக ஒரு வனவிலங்கு மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், வனத்துறை விதிகளின்படி, காப்புக் காடுகளுக்கு அருகிலோ அல்லது உணர்திறன் மண்டலங்களிலோ எந்தவொரு குவாரியும் இயங்க கூடாது என்ற அடிப்படை சட்டத்தை இந்த குவாரி உரிமையாளர்கள் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

தரைமட்டமான மலை
வனவிலங்கு மேம்பாலத்திற்கு மிக அருகிலேயே ஆதிஷ், விவேக், மருது உள்ளிட்ட பல தனியார் புளூ மெட்டல்ஸ் குவாரிகளுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில், விவேக் புளூ மெட்டல்ஸ் நிறுவனம் மலையின் பெரும்பகுதியை ஏற்கனவே தரைமட்டமாக்கி விட்டதாக கொதித்தெழுகின்றனர் கிராம மக்கள்.

பயங்கர நில அதிர்வு
தினமும் மாலை வேளைகளில் வைக்கப்படும் ராட்சத வெடிகளால் சுற்றியுள்ள கிராமங்களில் பயங்கர நில அதிர்வு ஏற்படுவதாகவும், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்திலும் மூச்சுத்திணறலிலும் சிக்குவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோத ஆக்கிரமிப்பு
தகவலறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின்படி, கனிமங்களை ஏற்றி செல்ல முறையான வழியே இல்லாத சூழலில், மலையிலிருந்து வரும் இயற்கை மழைநீர் ஓடைகளையும், சுமார் 6 ஏக்கர் 74 சென்ட் பரப்பளவு கொண்ட கால்நடை மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களையும் இந்த குவாரி நிர்வாகங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கனரக பாதைகளாக மாற்றியுள்ளன.

உச்சகட்ட அதிர்ச்சி, மிரட்டல்
இந்த கனிம கொள்ளை குறித்து RTI மூலம் ஆவணங்களை திரட்டி நீதிமன்றத்தை நாட முயலும் இயற்கை ஆர்வலர்களுக்கும், விவசாயிகளுக்கும், குவாரி உரிமையாளர்கள் தரப்பிலிருந்து அடியாட்கள் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் வெளிப்படையாக கொ* மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதுதான் உச்சக்கட்ட அதிர்ச்சி.

பொதுமக்கள் எச்சரிக்கை
இந்த விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.

இல்லையென்றால், ஒட்டுமொத்த கிராம மக்களையும் திரட்டி தேசிய நெடுஞ்சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் இறங்கப் போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

’இந்த பார் இனி எங்களுக்குத்தான், குடும்பத்தையே தீர்த்துக் கட்டுவோம்’

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved