news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு பள்ளியில் முதல்வர் புகைப்படத்துடன் வந்த தவெகவினர்
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளியில் முதல்வர் புகைப்படத்துடன் வந்த தவெகவினர்

இவர்தான் விஜய் மாமா

1

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvk vijay

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அந்த பகுதியை சார்ந்த தவெக நிர்வாகிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் என்பவருடன் சென்று முதல்வர் படத்தை காண்பித்து இவர் யாரென்று தெரிகிறதா? இவர் தான் முதல்வர் உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன் என்று பேசியும், மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போன்றும் ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர்.
 

எந்த ஒரு உள்ளாட்சி பொறுப்பிலும் இல்லாமல், தவெக துண்டை அணிந்து கொண்டு அரசு அதிகாரிகள் போல் அரசு பள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.  

முதல்வர் படங்கள் எல்லாம் தலைமையாசிரியர் அலுவலகத்தில் தான் இதுவரை வைக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறையை மாற்றி வகுப்பறையில் முதலமைச்சரின் புகைப்படத்தை மாட்டியது மட்டுமில்லாமல், இதுவரை இருந்த முறைக்கு எதிராக நடந்துள்ளது விவாதமாகியது. 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.20,000-க்கு மடிக்க கூடிய விவோ ஸ்மார்ட்ஃபோன்

0
58 mins agoshare
vivo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved