news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதுச்சேரி செல்லும் வழியில் விஜய்க்கு அதிர்ச்சி
tv

Also Watch

புதுச்சேரி செல்லும் வழியில் விஜய்க்கு அதிர்ச்சி

விழுப்புரம், மரக்காணம்

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரிக்கு சென்ற தவெக தலைவர் விஜயின் கார் மீது தாவிய தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மரக்காணத்தில், ஓடும் காரின் முன்பகுதி மீது ஏறியதால், காண்போர் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரியில் விஜய்
தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 01 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் தவெக தலைவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சாலை வழி பயணம்
வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இன்று காலை நீலாங்கரையில் உள்ள தமது வீட்டில் இருந்து தவெக தலைவர் விஜய் சாலை மார்க்கமாக புறப்பட்டார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஜய் கார் சென்றுகொண்டிருந்தது. விஜய்யின் காரை பின்தொடரக்கூடாது என தவெக தலைமை உத்தரவிட்டிருந்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல் விஜய் காரின் மீதே ஏறி தவெக தொண்டர்கள் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.

விஜய் காருக்கு முத்தம்
மேலும், காரில் ஏறிய தொண்டர் ஒருவர் கண்ணாடியில் முத்தம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த பவுன்சர், காரின் மீது ஏறிய தொண்டர்களை அப்புறப்படுத்த முயற்சித்தார். இளைஞர்கள் விஜய் கார் மீது ஏறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved