news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "நாங்கள் இருக்கிறோம், பாத்துக்குறோம்" என Buildup விட்ட லெப்ட் பாண்டி
tv

Also Watch

"நாங்கள் இருக்கிறோம், பாத்துக்குறோம்" என Buildup விட்ட லெப்ட் பாண்டி

நடுரோட்டில் நிற்கும் ஏழை பிள்ளைகள்

39

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேனி அருகே பெற்றோர் அடுத்தடுத்து உயிரிழந்ததால், ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட 3 பிள்ளைகள், தவெக மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டியின் போலி வாக்குறுதிகளால் நடுரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளனர். சோஷியல் மீடியாவில் லைக்குகளை அள்ளுவதற்காக ரீல்ஸ் விட்டுவிட்டு, நிஜத்தில் அந்த ஏழை பிள்ளைகளை கொட்டும் மழையில் மாட்டுக் கொட்டகையில் தவிக்கவிட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

பெற்றோர் உயிரிழப்பு
தேனி மாவட்டம் அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மச்சக்காளை. இவரது மனைவி ராசாத்தி, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தாயை இழந்த அந்த துயரத்திலிருந்து மீள்வதற்குள், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தந்தை மச்சக்காளையும் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தின் தூணாக இருந்த தந்தையும் சாய்ந்துவிட, குடும்ப பாரம் முழுவதையும் தாங்கும் பொறுப்பு மூத்த மகள் பெரியமாரதியின் தோளில் விழுந்திருக்கிறது.

லெப்ட் பாண்டி வருகை
தனியார் பல் மருத்துவமனையில் வெறும் 7 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை பார்த்துக்கொண்டு, ஐடிஐ படிக்கும் தம்பி பெரியமாரகன், 12ஆம் வகுப்பு படிக்கும் தங்கை மாலதி ஆகியோரை காப்பாற்ற போராடி வருகிறார். இவர்களது வீடோ, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது.

இந்த இக்கட்டான சூழலில்தான், ஊர் மக்கள் சிலர் உதவுவதற்கு முன்வந்தனர். ஆனால், ’நாங்கள் இருக்கிறோம், இந்த பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறோம்,’ என தனிப்பட்ட முறையில் களத்தில் குதித்தார் தேனி தெற்கு மாவட்ட தவெக செயலாளர் லெப்ட் பாண்டி. நேரில் ஆறுதல் கூறியதுடன், மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், சொந்தமாக புதிய வீடு கட்டி தருவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி தெளித்திருக்கிறார்.

ரீல்ஸ்... ரீல்ஸ்...
ஆனால், களத்தில் இறங்கி ஒரு செங்கல் கூட வைத்து வீடு கட்டி கொடுக்கவில்லை. மாறாக, சில செங்கற்களை அடுக்கி வைத்து நாடகம் ஆடி, சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக மாற்றி மாற்றி ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து தங்களின் இணையதள பக்கங்களில் பதிவிட்டார். விளம்பரம் வேகமாக பரவி முடிந்ததும், கடந்த 2 மாதங்களாக லெப்ட் பாண்டி, அந்த பக்கம் தலைகாட்டவே இல்லை என கூறுகிறார்கள் கிராம மக்கள்.

மாட்டுக் கொட்டகையில்...
மற்றவர்கள் உதவ நினைத்ததை எல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று தடுத்து நிறுத்தியதால், தற்போது நடுவழியில் கைவிடப்பட்டுள்ளனர் அந்த பிள்ளைகள். லெப்ட் பாண்டியின் செல்போனை தொடர்பு கொண்டால், அவர் போனை எடுக்காமல் அலைக்கழித்து நழுவியதாக சொல்லப்படுகிறது.

இறுதியில், வேறு வழியின்றி கொட்டும் மழையில், இடிந்து விழும் அபாயமுள்ள வீட்டைவிட்டு வெளியேறி, கழிப்பறை வசதி கூட இல்லாத மாட்டுக்கொட்டகையில், இரவும், பகலும் அச்சத்துடனும் தஞ்சம் புகுந்துள்ளனர் அந்த பிள்ளைகள்.

பொதுமக்கள் கொந்தளிப்பு
தனிநபர் விளம்பரத்துக்காக, ஏழை பிள்ளைகளின் எதிர்காலத்தை குலைத்த லெப்ட் பாண்டியின் செயலால், கொதித்து போன அப்பகுதி பொதுமக்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு சென்று கோரிக்கை மனு அளித்தனர். இதனிடையே, உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்தான் வீடு கட்டும் வேலையை பாதியில் நிறுத்தி வைத்ததாக லெப்ட் பாண்டி விளக்கம் அளித்திருக்கிறார்.

அரசுக்கு கோரிக்கை
அரசியல் லாபத்துக்காக ஏழை பிள்ளைகளின் எதிர்காலத்தை பயன்படுத்தி கொண்ட தவெக மாவட்டச் செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஆதரவற்ற பிள்ளைகளுக்கு அரசு உடனடியாக புதிய வீடு கட்டி தர வேண்டும் என்றும், குடும்பத்தை காப்பாற்ற போராடும் மூத்த பெண் பெரியமாரதிக்கு அரசு செவிலியர் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
ஆறு ஆண்டுகளாக கணவருக்கு ’அல்வா’ கொடுத்த மனைவி

ஆறு ஆண்டுகளாக கணவருக்கு ’அல்வா’ கொடுத்த மனைவி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசத்தும் Elevate Facelift

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved