news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சமூக நீதியுடன் செயலாற்றிடுவீர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
tv

Also Watch

சமூக நீதியுடன் செயலாற்றிடுவீர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை

41

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சாதாரண மக்களை அன்புடனும், பண்புடனும் அணுகுவதோடு, சமூக நீதியுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வென்ற தமிழக வெற்றியாளர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

நான் முதல்வன்...

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன் விக்டோரியா அரங்கில், அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. "நான் முதல்வன்" திட்டத்தில் படித்த 60 மாணவர்களில், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் 56 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.

பாராட்டு, வாழ்த்து
பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
கடுமையான உழைப்பைக் கொடுத்து, உலகிலேயே கடினமான UPSC தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். நீங்கள் படைத்திருப்பது சாதாரணமான சாதனை அல்ல. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. இதனை உடனடியாக சரி செய்ய, நான் முதல்வன் திட்டம், ஊக்கத் தொகை, உயர் பயிற்சி, நேர்முகத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி என்று, பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்தது.

தமிழ்நாட்டில் இருந்து 60 பேர்...
தற்போது, அதற்கான பலன்களைப் பெற்று வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் சுமார் 60 பேர், தமிழ்நாட்டில் இருந்து இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகி உள்ளது மகிழ்ச்சி தருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும். உங்கள் கனவு நிறைவேறி விட்டது, மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள்.

சமூக நீதி, அன்பாக இருங்கள்...
அதிகாரிகளாக பொறுப்பேற்றதும், சாமானிய மக்களிடம் அன்பாக இருங்கள். தமிழ்நாட்டில் இருந்து பல இளைஞர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று எளிய மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நாடுகளுக்கு இடையிலான உறவையும் மேம்படுத்த வேண்டும். சாதாரண மக்களை அன்புடனும், பண்புடனும் அணுகுவதோடு, சமூக நீதியுடனும் நடந்து கொள்ள வேண்டும்
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Related Link
வாழ்வின் பொற்காலம் - ஆர்.என்.ரவி

வாழ்வின் பொற்காலம் - ஆர்.என்.ரவி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved