Also Watch
Read this
By: Manigandan Raja

மக்களும் ஒத்துழைக்க வேண்டும்- பிரதமர் மோடி வலியுறுத்தல்
நீர் பாதுகாப்புக்கு அறிவியல் பூர்வமாக தீர்வு காண வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நீர் பாதுகாப்பு என்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்புணர்வு என்றும்
நீராதாரங்களை பாதுகாக்க அரசுடன் பொதுமக்களின் நீடித்த பங்கும் தேவை என்று கூறினார்.
சிந்து நீர் ஒப்பந்தம்: பாகிஸ்தான் பொய்களை பரப்பி வருகிறது
சிந்து நீர் ஒப்பந்தம் தொடர்பாக, தீய நோக்கிலான பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக உண்மைகளை தவறாக சித்தரிப்பதும் பொய்களை பரப்புவதும் பாகிஸ்தானின் வழக்கமாக உள்ளதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அமைச்சர் சித்தரிக்க முயன்றதுபோல, அந்த தீர்ப்பு நிரந்தர நடுவர் மன்றத்தால் வழங்கப்பட்டதல்ல எனவும் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய துருக்கி அதிபர்
ஐநா பொதுசபையில் பேசிய துருக்கி அதிபர் ரெசப் தயீப் எர்டோகன், ஜம்முகாஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பினார். தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ, காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் ஐ.நா. பட்டயம் மற்றும் தொடர்புடைய தீர்மானங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved