Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமானப்படை பங்கேற்பு
ராஜஸ்தானின் ஜோத்பூரில் 40 நாடுகள் பங்கேற்கும் பன்னாட்டு வான்வழிப் பயிற்சி தொடங்கியது. இந்திய விமானப்படை நடத்தும் வான்வழிப் பயிற்சியான தரங் சக்தியின் இரண்டாம் கட்டத்தில், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகள் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்களுடன் களமிறங்கியுள்ளன.
சத்தீஸ்கரில் தொடர்ந்து பெய்த கனமழை
சத்தீஸ்கரில் தொடர்ந்து பெய்த கனமழையால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. துர்க்-தல்லிராஜ்ஹரா ரயில் பாதையில் லட்டாபோர்-குண்டர்தேஹி இடையே தண்டவாளத்தில் நீர்த்தேக்கம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால் பாதுகாப்பு காரணமாக 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜன் சுராஜ் கட்சியை விரிவுப்படுத்தும் பிரசாந்த் கிஷோர்
பீகார் மாநிலத்தை தாண்டி டெல்லியிலும் ஜன் சுராஜ் கட்சியை விரிவுப்படுத்துவதற்கான முயற்சியில் அக்கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இறங்கியுள்ளார். பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து டெல்லியில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved