news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பணியை விட்டு நீக்கியதால் கோபம்
tv

Also Watch

tv

Read this

பணியை விட்டு நீக்கியதால் கோபம்

சோன்பத்ரா, உத்தரப்பிரதேசம்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காலை நேரத்தில் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற ஊழியர்கள். தொழிற்சாலையின் வாயிலில் மேலாளர் தலை சிதைக்கப்பட்டு உயிரிழந்து கிடந்த கொடூரம். சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு கிடந்ததால் அதிர்ச்சி. செல்போன் சிக்னலை வைத்து கொலையாளியை தட்டித் தூக்கிய போலீஸ். மேலாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?

செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீஸ்
வழக்கம்போல, காலை நேரத்துல தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்துருக்காங்க ஊழியர்கள். அப்ப வாசல்ல அந்த ஆலையின் மேலாளர் தலை சிதைக்கப்பட்ட நிலையில உயிரிழந்து கிடந்துருக்காரு. அதுமட்டும் இல்லாம, அங்கருந்த சிசிடிவி காட்சிகளும், தொழிற்சாலைக்குள்ள இருந்த பொருட்களும் உடைக்கப்பட்டு இருந்துருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச ஊழியர்கள், உடனே போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. இதகேட்டு உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு விசாரணையில இறங்குனாங்க. சிசிடிவி எல்லாம் உடைக்கப்பட்டு இருந்ததால, கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்குறதுல போலீஸ்க்கு சிக்கல் ஏற்பட்டிருக்கு. கொலை நடந்த நேரத்துல அந்த இடத்துல யாரோட செல்போன் சிக்னல் ஆச்சும் பதிவாகியிருக்கான்னு போலீஸ் செக் பண்ணிருக்காங்க. அப்ப அதே ஆலையில் வேலை பார்த்த ஷ்ரவன் சிங்கோட செல்போன் சிக்னல் பதிவாகியிருந்தது தெரிய வந்துருக்கு. இதனால, நேரா அவரோட வீட்டுக்கு போன போலீஸ் கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க.

சரியாக பணி செய்யாமல் இருந்த ஊழியர் ஷ்ரவன் சிங்
உத்தரபிரதேசத்துல உள்ள சோன்பத்ரா பகுதியில சிமெண்ட் தொழிற்சாலை ஒன்னு இயங்கிட்டு இருக்கு. இந்த தொழிற்சாலையில் விஷ்ணு ஹரி-ங்குற நபரு மேலாளரா பணியாற்றிட்டு இருக்காரு. அதே மாதிரி கடந்த 2 வருஷம்மா ஷ்ரவன் சிங்-ங்குற நபர் ஊழியரா வேலை செஞ்சுட்டுஇருந்துருக்காரு. ஷ்ரவன் சிங்கோட குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில இருந்துருக்கு. இந்த ஊதியத்த நம்பி தான் இவங்க குடும்பமே இருக்கு. இதுக்கிடையில மேலாளருக்கும் அந்த ஊழியருக்கும் இடையில பயங்கர பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. ஷ்ரவன் சிங் கரைக்டா கம்பெனிக்கு வராமலும், சரியா வேலை செய்யாமலும் இருந்ததால மேலாளர் விஷ்ணு ஹரி அவர அடிக்கடி கடிஞ்சுக்கிட்டே இருந்துருக்காரு. இதனால ரெண்டு பேருக்கு இடையில மோதல் ஏற்பட்டிருக்கு.

ஷ்ரவன் சிங்கை பணியில் இருந்து நீக்கிய விஷ்ணு ஹரி
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஷ்ரவன் சிங் வேலை செய்யாம கம்பெனியில சும்மா உட்காந்துட்டு இருந்துருக்காரு. அந்த நேரத்துல அங்க வந்த விஷ்ணு ஹரி, வேலை செய்யாம கதை பேசிட்டு இருக்கியான்னு, கேட்டு அவர தகாத வார்த்தையால திட்டிருக்காரு. இத கேட்டு கோபமான ஷ்ரவன், விஷ்ணு ஹரிய தாக்கிருக்காரு. ரெண்டு பேரும் தொழிற்சாலையிலையே கட்டிப் புரண்டு மோதிக்கிட்டாங்க. ஷ்ரவன் சிங் கம்பெனியில ஒழுங்கீனமா செயல்பட்டதால, அவர அந்த தொழிற்சாலையில இருந்து பணி நீக்கம் பண்ணிட்டாங்க. இதனால வருமானம் இல்லாம ஷ்ரவன் சிங்கோட குடும்பத்துல சிக்கல் ஏற்பட்டிருக்கு. வீட்டுச் செலவுக்கும் ஷ்வரன் சிங் பணம் கொடுக்காததால அவரோட மனைவி, கணவன் கூட சண்டை போட்டுட்டு தாய் வீட்டுக்கு போய்ட்டாங்க. இதனால கடும் கோபமான கணவன் விஷ்ணு ஹரியால தன்னோட குடும்பம் சின்னாபின்னாமானதா நினைச்சு நொந்து போய் அவர கொலை பண்ண திட்டம் போட்ருக்காரு.

ஷ்ரவன் சிங்கை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ்
சம்பவத்தன்னைக்கு, விஷ்ணு ஹரி, தொழிற்சாலையிலேயே படுத்து தூங்கிருக்காரு. இத தெரிஞ்சு அங்க வந்த ஷ்ரவன் சிங், தொழிற்சாலை சுவர் ஏறி குதிச்சு, உள்ள புகுந்து மேலாளரை சரமாரியா தாக்கிருக்காரு. அடுத்து கீழ கிடந்த கற்கள எடுத்த ஊழியர், விஷ்ணு ஹரியோட தலையிலையே பல முறை ஓங்கி அடிச்சுருக்காரு. இதுல வலி தாங்க முடியாத விஷ்ணு சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்து உயிரிழந்துட்டாரு. அடுத்து ஆலைக்குள்ள போன ஷ்ரவன், கல்லாப்பெட்டியில இருந்த 6 ஆயிரத்து 500 ரூபாய திருடிட்டு, சிசிடிவிய உடைச்சு சேதப்படுத்திருக்காரு. அதுக்கடுத்து தொழிற்சாலையில இருந்த மானிட்டர், பிரிண்டர்ன்னு எல்லாத்தையும் சேதப்படுத்தி பக்கத்துல உள்ள புதர்ல வீசிட்டு போய்ட்டாரு. ஆனா செல்போன் சிக்னல வச்சு ஷ்ரவன் சிங் தான் கொலையாளின்னு கன்பார்ம் பண்ண போலீஸ் அவர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.


Related Link
மருமகனே செய்த பயங்கரம்

மருமகனே செய்த பயங்கரம்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
5 hrs 26 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved