Also Watch
Read this
By: Manigandan Raja

"எனது 8 மாத கால கடின உழைப்பு வீணாகி விட்டதே"
தனது 8 மாத கடின உழைப்பு வீணாகி விட்டதாக பிட்டு தபாஹி வேதனை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பியோரா நகரை சேர்ந்த பிட்டு தபாஹி என அறியப்படும் சுரேந்திர சிங் சவுத்ரி, அங்குள்ள அஜ்னார் ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்த நிலையில், தற்போது மீண்டும் ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் நிறைந்துள்ளன.
ஒடிசாவில் 2 தலைகளுடன் பிறந்த அபூர்வ குழந்தை

மருத்துவ உலகில் மிக அரிதாக, ஒடிசாவில் 2 தலைகளுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண்ணிற்கு பிறந்த இந்த குழந்தைக்கு 2 கழுத்துகள் இருந்தாலும், உடல் ஒன்று மட்டுமே உள்ளது. மேலும், ஒரு ஜோடி கைகளும், ஒரு ஜோடி கால்களும் மட்டுமே உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved