news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது
tv

Also Watch

இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது

ப்ளை துபாய்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஐசக் ஹெட்சாக்

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெட்சாக் வழங்குவதாக அறிவித்துள்ளார்

  • ஃப்ளை துபாய் விமானத்தின் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய சிவிலியன் வீரதீர விருதான அதிபர் விருது வழங்கப்படவுள்ளது. இஸ்ரேலிய மக்கள் சார்பில் அதிபர் ஐசக் ஹெட்சாக் இந்த விருதை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
  • கேப்டன் மச்சாரின் அபாரமான துணிச்சலும், சிறந்த தொழில்முறை அணுகுமுறையும் ஒரு பெரும் பேரழிவை தவிர்க்க உதவியதாகவும், அவர் உடல்நலம் தேறியதும் இஸ்ரேல் மக்களின் சார்பாக அவருக்கு குடிமைசார் வீரத்திற்கான அதிபர் விருதை வழங்குவதை பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் அதிபர் அறிவித்துள்ளார்.

பள்ளிக்குள் புகுந்து முன்னாள் மாணவர் தாக்குதல்

  • போலந்து நாட்டில் பள்ளிக்குள் புகுந்து முன்னாள் மாணவர் நடத்திய தாக்குதலில் பெண் துப்புரவு பணியாளர் உயிரிழந்தார். மேலும், பள்ளி முதல்வர் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
  • வார்சாவுக்கு வட கிழக்கே உள்ள லெஸ்ஸ்சிடோல் நோவினி தொடக்கப்பள்ளியில் 15 வயதுடைய முன்னாள் மாணவர் ஒருவர் கத்தியால் குத்தினார் தாக்குதல் நடத்திய சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.
  • 7-ம் தேதி தொழிற்பள்ளியில் 19 வயது மாணவர் நடத்திய தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர். தொடர் தாக்குதல்களை தொடர்ந்து போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அவசரக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

அம்பானிதான் இந்தியாவின் முதலாளியா? எலான் மஸ்க் கேள்வி

  • இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவை உள்ளே நுழையவிடாமல் முகேஷ் அம்பானிதான் தடுத்து நிறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள எலான் மஸ்க், அம்பானிதான் இந்தியாவின் முதலாளியா என கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் நிறுவனம் உரிமம் பெற்றதுடன், இந்திய அரசின் ஒவ்வொரு விதிமுறையையும் சட்டத்தையும் பின்பற்றி வருவதாகவும், எனினும், இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அக்.10ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved