Also Watch
Read this
By: Manigandan Raja

வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகள் மட்டுமே பாடப்பட வேண்டும்
கர்நாடக அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும், அத்தகைய நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் தாயார், சிவ ராஜ்குமாருக்கு நோட்டீஸ்
கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, தனி விவரங்களில் முரண்பாடு எழுந்துள்ளதாக முதல்வர் டி.கே. சிவகுமாரின் தாயார் மற்றும் நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் வருகை
ரஷ்ய அதிபர் புதின் 2026 BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து பல்வேறு இருதரப்பு சந்திப்புகளிலும் புதின் பங்கேற்க உள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved