Also Watch
Read this
By: Manigandan Raja

சுனேத்ரா பவார் - பிரஷாந்த் கிஷோர் முக்கிய சந்திப்பு
தனது நெருங்கிய நண்பரான பிரஷாந்த் கிஷோர், சுனேத்ரா பவாரை சந்தித்து பேசியது தொடர்பாக சுப்ரியே சுலே மவுனம் கலைந்தார். மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரஷாந்த் கிஷோர் சுனேத்ரா சந்திப்பு என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்றும், அதில் கருத்துச் சொல்ல எதுவும் இல்லை என்றார்.
என்னதான் தனது நெருங்கிய நண்பராக இருந்தாலும் நட்பு வேறு தொழில் வேறு என பாடமெடுத்தார். முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இருபிரிவுகளை இணைக்கும் வேலையை பிரஷாந்த் முன்னெடுத்து வருவதாக தகவல் பரவியது.
அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 26 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தடைசெய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி (JeI) அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, சோபோர் நகரத்திலும், போமாய், தர்ஸூ, ஷட்லூ, ரோஹாமா, கோரிபோரா மற்றும் பெஹ்ராம்போரா உள்ளிட்ட பல கிராமங்களிலும் உள்ள குடியிருப்பு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
குடிமைப் பணிகளுக்கு தேர்வாகும் இளைஞர்கள், மாதம் ஒரு முறையாவது அரசுப் பள்ளிகளுக்குச் சென்று வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

வகுப்புகளை போன்று எடுக்காமல் எளிமையான நடையில் அவர்களுடன் பேசி, வேலைவாய்ப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்கான வாய்ப்புகளை பற்றி புரிதலை உண்டாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இதற்கென பள்ளிகளில் அட்டவணை போட்டு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved