Also Watch
Read this
By: Manigandan Raja

விமானம் விபத்துக்குள்ளான காட்சி :
அஜித்பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து புதிய காணொலி வெளியாகியுள்ளது. 12 வினாடிகள் கொண்ட வீடியோவின் முடிவில், இடிபாடுகளில் இருந்து பயங்கர வெடிப்பு சத்தமும், சிலர் அலறுவது கேட்கும் நிலையில் வீடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி 28 ம் தேதி மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம், பாராமதியில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இதில் அஜித்பவார் மற்றும் 4 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved