இந்தியா-சுவிஸ் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி-சுவிட்சர்லாந்து அதிபர் பார்மலின்((Parmelin)) முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சுவிட்சர்லாந்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்..
PM CARES நிதியில் வழங்கப்பட்ட 18 வென்டிலேட்டர்கள்
உத்தரப் பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்ட மருத்துவமனையில், கொரோனா காலத்தில் PM CARES நிதியில் வழங்கப்பட்ட 18 வென்டிலேட்டர் செட்களில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேவையான பைப் லைன், பயிற்சி பெற்ற ஊழியர்கள் உள்ளிட்ட வசதிகள் இல்லாததே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ராம் ரமேஷ் இவ்வளவு அவசரபுத்தி கொண்டவரா?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இவ்வளவு அவசரபுத்தி கொண்டவர் என்று நினைக்கவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடி உள்ளார். நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு கேட்டு மக்கள் போராடியதாக எக்ஸ் பயனர் ஒருவர் பகிர்ந்த வீடியோ குறித்து ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருந்தார்.
இதனை மறுத்து நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.