Also Watch
Read this
Posted on: Dec 21, 2025 09:20 AM
By: Web Team

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் கனவுத் திட்டமான‘ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளிக்கு சென்று பூமி திரும்பும் வீரர்களின் விண்கலன் பாதுகாப்பாக தரை இறங்குவதை உறுதி செய்யும் வகையில், பாராசூட் சோதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சண்டிகரில் உள்ள ஆர்.டி.ஆர்.எஸ். ஆய்வகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விண்கலம் பூமியை நோக்கி இறங்கும்போது, அதில் இணைக்கப்பட்டுள்ள 10 பாராசூட்கள், அடுத்தடுத்து விரிவடைந்து விண்கலத்தின் வேகத்தை சீராக குறைப்பதை உறுதி செய்ததாகவும், பாராசூட்டுகளின் உறுதித்தன்மைக்காக நடத்தப்பட்ட 2 சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved