news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஹரியானா மாநில பாஜக எம்எல்ஏக்களுடன் பிரதமர் சந்திப்பு
tv

Also Watch

ஹரியானா மாநில பாஜக எம்எல்ஏக்களுடன் பிரதமர் சந்திப்பு

ஹரியானா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi MP'S MEET

மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதம்

பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஹரியானா மாநில பாஜக எம்எல்ஏக்களைச் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, மாநில பாஜக தலைவர் அர்ச்சனா குப்தா, மாநில பாஜக பொறுப்பாளர் ஸ்மிருதி இரானி மற்றும் நிதின் நபின் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ பேரோன் பிஸ்வாஸ் தீக்காயம்

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ பேரோன் பிஸ்வாஸ் பலத்த தீக்காயமடைந்தார். துலியானில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் பீடி தொழிற்சாலை இயங்குகிறது. அந்த வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது பேரோன் பிஸ்வாஸ் 30 சதவீத தீக்காயமடைந்தார்.

நாடாளுமன்ற நிலைக்குழுக்குள் மாற்றி அமைப்பு

நடப்பு ஆண்டுக்கான மக்களவை மற்றும் மாநிலங்களை எம்.பி.க்கள் அடங்கிய நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, சிவா ஆகியோருக்கு மீண்டும் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில் துறை சிவாவுக்கும், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது வினியோகம் கனிமொழிக்கும் வழங்கப்பட்டுள்ளன.

Related Link
அக்.10-ல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் அறிவிப்பு

அக்.10-ல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

70,000 இந்திய திறன்மிக்க தொழிலாளர்களை பணியமர்த்தும் ரஷ்யா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved