Also Watch
Read this
By: Manigandan Raja

இரு தரப்பு உறவை வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாக பதிவு
கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா - கனடா இடையான உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாகவும், முக்கிய துறைகளில் ஒன்றிணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தொடரும்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணி போராட்டம் தொடரும் என ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் ஆனாலும் போராட்டம் ஓயாது என்றும், கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் எனவும் கூறினார்.
"2029 தேர்தலிலும் தோல்வியை சந்திக்க தயாராக இருங்கள்"

தொடர்ந்து 4-வது முறையாக 2029 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர். போர்வையில் ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பளிக்கும் ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி உத்தியை நாட்டு மக்கள் முழுமையாக புரிந்து கொண்டுவிட்டதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved