விமானிகளின் தகவலை வெளியிட்டு பெருமை : இந்தியாவில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் விமானிகளைப் பணியமர்த்திய முதல் மற்றும் ஒரே விமான நிறுவனம் என்ற சாதனையை இண்டிகோ ((IndiGo)) படைத்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, இண்டிகோ நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்றும், தங்களது விமானிகளின் எண்ணிக்கையில் 17 புள்ளி 5 சதவீதம் பேர் பெண்கள் என்றும் அறிவித்துள்ளது. இது உலகளாவிய சராசரியை விட 3 மடங்கு அதிகம் என்றும், இந்த நடவடிக்கை, விமானத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும், பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. Related Link மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம்