Also Watch
Read this
By: Manigandan Raja

2 இலவச சிலிண்டர்கள் வழங்க நிதி ஒதுக்கீடு :
ஈரானுக்கு எதிரான போருக்கு மத்தியில் டெல்லி பட்ஜெட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்குவதற்காக 260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சாலைகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு மற்றும் குடிமைச் செலவினங்கள் என 1 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை டில்லி முதலமைச்சர் ரேகாகுப்தா தாக்கல் செய்தார். இதில் முந்தைய ஆம் ஆத்மி அரசின் இலவசப் பொருட்கள் கலாச்சாரத்தை கடுமையாக விமர்சித்திருந்த அவர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்காக 260 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். மொத்த நிதி ஒதுக்கீட்டில் 21 சதவீதம் சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved