news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 2029-க்குள் பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் இல்லாத மாநிலம்
tv

Also Watch

2029-க்குள் பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் இல்லாத மாநிலம்

ஆம் ஆத்மி அரசு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Amitsha

பாஜக ஆட்சியில் அமர்ந்தால் உறுதி: அமித்ஷா திட்டவட்டம்

பாஜக ஆட்சியில் அமர்ந்தால் 2029-க்குள் பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

ஜலந்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், போதைப்பொருள் வர்த்தகத்தை ஆம் ஆத்மி அரசு வெளிப்படையாக அனுமதித்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு, விவசாயிகள், தொழில்துறை உள்ளிட்டவற்றில் பல பிரச்னைகளை பஞ்சாப் எதிர்கொள்வதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், பாஜவுக்கு வாக்களித்தால் போதைப்பொருள் இல்லாத பஞ்சாப் என்ற நிலை உருவாகும் என்றார்.

மாநில பாஜக தலைமையகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில பாஜக தலைமையகமான மாரார்ஜி பவன் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கேரள பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டிய விவகாரத்தை தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே மோதல்கள் மற்றும் பரஸ்பர தாக்குதல்கள் வெடித்தன. இந்த சூழலில், அலுவலகத் தாக்குதலை கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டையே உலுக்கிய வணிக கடற்படை அதிகாரி கொலை வழக்கு

கடந்தாண்டு நாட்டையே உலுக்கிய, உத்தரப் பிரதேச முன்னாள் வணிக கடற்படை அதிகாரி கொலை வழக்கில் அவரது மனைவி மற்றும் ஆண் நண்பர் குற்றவாளிகள் என மீரட் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மற்றும் தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பும், சௌரப்பின் குடும்பத்தினரும் வலியுறுத்தி உள்ளனர். வணிக கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத்தை, அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகியும், அவரது ஆண் நண்பர் சாஹில் சுக்லாவும் இணைந்து கொலை செய்தனர்.

Related Link
இது தாமரை விதைகள் இல்லையா? பஞ்சுபோன்று வெடித்து விழும் மக்கானா

இது தாமரை விதைகள் இல்லையா? பஞ்சுபோன்று வெடித்து விழும் மக்கானா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளப்பெருக்கால் நேபாள தொலை தொடர்பு துறைக்கு இழப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved