news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வாக்காளர் பட்டியல் சீர்திருத்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு
tv

Also Watch

வாக்காளர் பட்டியல் சீர்திருத்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

நீக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வாக்காளர் பட்டியல்

95,000 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டம்

உத்தரகாண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் மூலம் 95000 பேரை நீக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முந்தைய வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், இருமுறை பெயர் இடம் பெற்றவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் என 95000 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த நடவடிக்கையில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2-ஆவது மலைப்பாதையில் உள்ள விநாயகர் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் காரணமாக பக்தர்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் பயணிக்கும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள வனத்துறையினர், சிறுத்தையை அடர் வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த அதிகாரி

புதுச்சேரி காவல்துறையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில், காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், சீனியர் எஸ்.பி. நித்யா தலைமையிலான உட்புகார் குழு விசாரணை நடத்தியது.

அதில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரி தலைமைச் செயலாளர் சரத் சவுகான், எஸ்.பி. சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Link
சிக்கிம் மாநிலத்தில் பெய்த கனமழையால் மண் சரிவு

சிக்கிம் மாநிலத்தில் பெய்த கனமழையால் மண் சரிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு விதிக்கும் வரி அல்ல - நிதியமைச்சர் விளக்கம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved