news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மாணவர்கள் தொடர் போராட்டம் - பதற்றமான சூழல்
tv

Also Watch

மாணவர்கள் தொடர் போராட்டம் - பதற்றமான சூழல்

பக்வாரா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Punjab

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பரவிய தகவல்

பஞ்சாப் லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக மாணவி விடுதியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பரவிய தகவலையடுத்து பக்வாரா பகுதியில் மாணவர்கள் போராட்டம் வன்முறையில் மாறியது.

குற்றவாளியை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்தும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் மீதும் தாக்குதல் நடத்தினர்.

லவ்லி புரொஃபஷனல் பல்கலை. மாணவர்கள் போராட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பரவிய தகவலையடுத்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், அப்பகுதியில் நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் போராட்டம் - லாரி ஓட்டுநர்கள் தவிப்பு

பஞ்சாப்பின் பக்வாரா ((Phagwara)) பகுதியில் மாணவர்களின் போராட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி லாரிகளை ஓரமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும் லாரி ஓட்டுநர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எந்நேரமும் மாணவர்கள் தாக்க வாய்ப்புள்ளதால் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Link
தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு இல்லை

தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு இல்லை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வார தொடக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved