Also Watch
Read this
By: Manigandan Raja

குழந்தைகளை ஆபாச தளங்களிலிருந்து பாதுகாக்க வழிமுறைகள்
குழந்தைகளை ஆபாச தளங்கள் மற்றும் இணையவழி பாலியல் சுரண்டலிலிருந்து பாதுகாக்க வழிகாட்டுதல்களை உருவாக்கக்கோரிய மனுவுக்கு, 4 வாரத்தில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறார்களுக்கு டிஜிட்டல் தளங்களில் பெற்றோர் ஒப்புதல், சரிபார்ப்பு மற்றும் இ-கே.ஒய்.சி. நடைமுறைகளை கட்டாயமாக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கழுத்தில் டிராக்டர் டயர் சிக்கியப்படி சுற்றிய காட்டு யானை
அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் சிக்கிய நிலையில் சுற்றித் திரிந்த காட்டு யானை மீட்கப்பட்டது. தகவல் அறிந்த காசிரங்கா வனவிலங்கு மீட்புக் குழுவினர், வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் யானையை பாதுகாப்பாக மீட்டு, அதன் கழுத்தில் சிக்கியிருந்த டயரை வெற்றிகரமாக அகற்றினர்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட உயிரிழப்பு 16 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய விற்பனை மற்றும் விநியோகத்தில் தொடர்புடையவர்களை கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved