Also Watch
Read this
By: Manigandan Raja

நாளை மாலை 5 மணிக்கு தேசியக்கொடி ஏற்றும் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கட்சியின் நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மாலை 5 மணிக்கு டெல்லி சென்ட்ரல் பார்க்கில் தேசியக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
அக்டோபர் 28-ம் தேதி நகர்ப்புற உள்ளட்சித் தேர்தல்

ஆந்திராவில் அக்டோபர் 28-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
MPTC மற்றும் ZPTC தேர்தல்கள் நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் எனவும், கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 26, 28 மற்றும் டிசம்பர் 2-ம் தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
முதல் மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய நபர்

டெல்லியில் உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின்போது, முதல் மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய பதைபதைப்பூட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நல்வாய்ப்பாக கீழே நின்றவர்கள் குழந்தையை பத்திரமாக பிடித்தனர்.
மௌஜ்பூர் பகுதியில் உள்ள உணவகத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved