Also Watch
Read this
By: Manigandan Raja

பாஸ்வேர்டு கேட்டு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பெண்ணின் ஐபோனை திருடிய திருடன், அதன் பாஸ்வேர்டு கேட்டு குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த மாதம் கிளெமென்ட் டவுன் (Clement Town) பகுதியில் உள்ள கெளசிகி தியானி என்ற பெண்ணின் குடியிருப்புக்குள் புகுந்த திருடர்கள் அவருடைய ஐபோன் உட்பட அதே கட்டிடத்தில் இருந்த பலரின் மொபைல்கள் மற்றும் லேப்டாப்களைத் திருடிச் சென்றுள்ளனர். ஒரு மாதத்திற்குப் பிறகு செல்போனின் பாஸ்வேர்டை தருமாறு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
பெட்ரோல் பங்க் மீது மோதிய சொகுசு காரால் தீ விபத்து

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் மதுபோதையில் இரவு சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி வந்து பெட்ரோல் பங்க் மீது மோதியதில் காரும், பெட்ரோல் பங்கும் பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்த நிலையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved