news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம்
tv

Also Watch

tv

Read this

காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம்

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராகுல் காந்தி

மாமல்லபுரத்தில் நடைபெறும் 10 நாட்கள் பயிற்சி முகாம் 

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்களுக்கான 10 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறும் நிலையில், இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 22-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறும் பயிற்சி முகாமில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என தலைமை அறிவுறுத்தியுள்ளது.

வயநாடு மண் சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு 

கேரளம் மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் மண் சரிந்து வருவதை கண்டதும் மக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், மண்ணில் புதைந்த பலரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்தன. மேலும், மண்சரிவின் போது நின்று கொண்டிருந்த லாரி ஒன்று அடித்து வரப்பட்டதைக் கண்டு ஒருவர் பதறி அடித்து ஓடினார்.

குஜராத் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழை 

குஜராத் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கார் மற்றும் பேருந்து சிக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.நவசாரி பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கிக் கொண்டது.

இதையடுத்து, காரில் இருந்தவர்களையும், காரையும் மீட்புப்படையினர் மீட்டனர். அதேபோல, நவசாரியின் மற்றொரு பகுதியில், சர்வீஸ் சாலையில் சிக்கிக் கொண்ட பேருந்தையும் மீட்புப்படையினர் மீட்டனர்.

Related Link
இந்தியாவை விழுங்கும் சைபர் சூறாவளி, ஆன்-லைனில் தொடரும் டிஜிட்டல் வேட்டை

இந்தியாவை விழுங்கும் சைபர் சூறாவளி, ஆன்-லைனில் தொடரும் டிஜிட்டல் வேட்டை

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அமைச்சரின் 4 தனிச் செயலாளர்கள் அதிரடி நீக்கம்

0
0 min agoshare
பூபேந்தர் யாதவின்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau