news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ட்ரம்பின் மருமகன் மைக்கேல் பவுலோஸ் கொச்சிக்கு வருகை
tv

Also Watch

ட்ரம்பின் மருமகன் மைக்கேல் பவுலோஸ் கொச்சிக்கு வருகை

செர்ஜியோ

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

அதிகாரப்பூர்வ அரசு பயணம் அல்ல என தெரிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மருமகன் மைக்கேல் பவுலோஸ், தனிப்பட்ட பயணமாக கேரள மாநிலம் கொச்சிக்கு வந்துள்ளார். அவருடன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரும் வந்துள்ளார்.

பின்னர் பவுலோஸ் ஆலப்புழைக்குச் சென்று, கேரளாவின் புகழ்பெற்ற பின்னேரி நீர்வழிப் பகுதிகளை பார்வையிட்டு, ஹவுஸ்போட் பயணத்திலும் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணம் அதிகாரப்பூர்வ அரசு பயணம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் பேச்சு 

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தொலைபேசியில் உரையாடினார். இது தொடர்பான பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தனக்கு அமெரிக்க துணை அதிபரிடம் இருந்து தொலைப்பேசியில் அழைப்பு வந்ததாகவும்.

அப்போது தாங்கள் இருவரும் இரு நாட்டு இடையிலான விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை, முக்கிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு துணை ஜனாதிபதி பயணம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறையை பார்வையிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்களிம் படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

தியாகிகள் நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், வீர சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறையையும் பார்வையிட்டார்.


Related Link
கேரளத்திற்கு செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கேரளத்திற்கு செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆண்டாள் கோவில் தேரின் அலங்கார துணிகள் சேதம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved