Also Watch
Read this
By: Web Team

மத்திய பட்ஜெட் கடந்த 2017 முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் 2026ல், பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்றாலும், நாடாளுமன்ற தாக்கல் போன்ற மிக முக்கிய நிகழ்வுகளுக்காக நாடாளுமன்றம் கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 2020ல், கொரோனா தொற்று காலத்தின் போது அவசர தேவைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் கூடியது. இந்நிலையில், 2026 - 27ம் நிதியாண்டுக்கான 80வது மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved