news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வீடு இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த விபத்தின் வீடியோ
tv

Also Watch

வீடு இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த விபத்தின் வீடியோ

திடீரென இடிந்து விழுந்தது.

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இமாச்சலபிரதேசம்

விபத்தில் 2 குழந்தைகள் காயத்துடன் உயிர் தப்பினர்

இமாச்சலபிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த விபத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. சிச்சடியா ((Chhichhriyan)) கிராமத்தில் உள்ள பீம் சிங் என்பவரின் வீடு திடீரென இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கிய 4 பேரை உள்ளூர் மக்கள் மீட்டனர். இதில் பீம் சிங்கின் மனைவி மற்றும்அவரது மகள் பூஜா உயிரிழந்த நிலையில், பூஜாவின் 2 குழந்தைகளும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.

காரின் மேற்கூரையில் அமர்ந்தவாறு சாலையில் சாகசம்

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே காரின் மேற்கூரை மீது அமர்ந்து ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர்களின் வீடியோ வெளியாகி உள்ளது. பேராம்பிரா பகுதி வழியாக சென்ற கார்களின் மேற்கூரை மற்றும் கார்களின் கதவுகள் மீது அமர்ந்தவாறு இளைஞர்கள் சிலர் பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பயணித்தனர்.

இது குறித்த வீடியோ வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்பது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தம்பதியை பிட்புல் நாய் கொடூரமாகக் கடித்துக் குதறிய காட்சி

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், வாடகைக்கு வீடு பார்க்க புரோக்கருடன் சென்ற தம்பதியை வளர்ப்பு பிட்புல் நாய் கொடூரமாகக் கடித்துக் குதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பாட்டியாலாவின் குமன் நகரில் ((Ghuman Nagar)) அங்கித் சபர்வாலும்,அவரது மனைவி ஷிபாலியும் வீடு பார்க்க புரோக்கருடன் சென்றனர். வீட்டின் கேட் திறந்தவுடன், உள்ளே இருந்த வளர்ப்பு பிட்புல் நாய் திடீரென ஷிபாலியைக் கடிக்கத் தொடங்கியது. மனைவியைக் காப்பாற்ற முயன்ற அங்கித்தையும் நாய் கடித்தது. காயமடைந்த தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Link
தான் பேசிய பின் மேடையை சுத்தம் செய்வதா?

தான் பேசிய பின் மேடையை சுத்தம் செய்வதா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவாரூரில் த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி கைது

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved