news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு
tv

Also Watch

மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு

அனுதாப ஓட்டு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mamtha bannerji

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியது பொய்

மேற்குவங்கத்தில் 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் பொய் என மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

மேலும், மக்களை ஏமாற்றவும், தேர்தலில் அனுதாப ஓட்டுகளை பெறவும் அவர் இப்படி நாடகமாடியதாகவும், இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தலில் பிரசாரம் செய்தபோது மர்ம நபர்கள் காரின் கதவை இழுத்து தள்ளியதால் கால் நசுங்கியதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

SIR-க்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

உத்தரகண்ட் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 8 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது மொத்தம் 71 லட்சத்து 58 ஆயிரத்து 949 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், 37 லட்சத்து 37 ஆயிரத்து 701 ஆண் வாக்காளர்கள், 34 லட்சத்து 21 ஆயிரத்து 36 பெண் வாக்காளர்கள் மற்றும் 212 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 72 ஆயிரத்து 656 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 892 பேரும் உள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைது

பல ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த கும்பலின் தலைவன் நவ்பிரீத் சிங், துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அவரை காவல் துறையின் சிறப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று மத்திய முகமைகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். மேலும், 2029 டிசம்பருக்குள் போதைப் பொருள் கும்பல்களை ஒழித்துக்கட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Link
திரிணமூல் காங்கிரசின் பெயரும் சின்னமும் அழிந்துவிட்டது

திரிணமூல் காங்கிரசின் பெயரும் சின்னமும் அழிந்துவிட்டது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசத்தும் Aprilia SXR GT

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved