Also Watch
Read this
By: Manigandan Raja

ராகுல் காந்தி 2ம் இடம்-விஜய் மூன்றாவது இடம்
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் பதவி வகிக்க வேண்டும் என சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் விஜய் மூன்றாம் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் தற்போதைய பிரதமர் மோடி
48.7 சதவீத ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் 2ம் இடத்தில் உள்ள நிலையில், விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி 4 மடங்கு அதிகரிப்பு
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பீரங்கிகளை பழுது பார்க்கும் மையத்திற்கு அடிக்கல் நாட்டிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 2014ல், 46,000 கோடி ரூபாயாக இருந்த உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி, தற்போது நான்கு மடங்கு அதிகரித்து, 1.80 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் பாஜக வெல்லும்
இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் கூட பாஜக தலைமையிலான NDA கூட்டணி 326 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என சி-வோட்டர் கருத்துக் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. எனினும், கடந்த ஜனவரி மாத கணிப்பில் 352 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 26 இடங்கள் குறைந்துள்ளன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved