Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் விளக்கம்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தங்களது சொந்த எரிசக்தி தேவைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும்தான் என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ரஷ்யாவுக்கு உதவ வேண்டும் என்பதற்காக இந்தியா தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றார். மேலும், இந்த விவகாரத்தில் தங்களது தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை பாதுகாக்கும் வகையில், உறுதியாக செயல்பட முடியும் என்பதை இந்தியா ஏற்கனவே காட்டியுள்ளதாக தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டின் உச்சவரம்பை உயர்த்த வலியுறுத்தல்
இடஒதுக்கீட்டின் வரம்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தொகையின் அடிப்படையில் சம வாய்ப்புகள் இல்லாமல் ஒரு சமத்துவ சமுதாயத்தை அடைய முடியாது என செய்தியாளர் சந்திப்பில் கூறிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக உருவாக்க இலக்கு
போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 100 பேரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், வரும் 2029ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார்.

போதைப்பொருள் ஒழிப்பிற்காக சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான குற்றவியல் வலைப்பின்னல்களை முறியடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved