news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தொடர்ந்து உயரும் தங்கம் விலை
tv

Also Watch

tv

Read this

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

வெள்ளியின் விலையும் உயர்வு

93

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 230 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலையால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்வை கண்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 15 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

கடந்த வாரத்தில்...
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. கடந்த வாரத்தில், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 170 ரூபாய் உயர்ந்து, 14 ஆயிரத்து 420 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

பிப்.7ஆம் தேதி விலை நிலவரம்
சென்​னை​யில், 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை, பிப்ரவரி 7ஆம் தேதி காலை, பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,420க்கு விற்​பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,360 ஆக இருந்தது. வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி ஒரு கிரா​முக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.285க்​கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ரூ.2,85,000க்​கும் விற்பனை ஆனது.

இறக்குமதியில் இந்தியா முன்னணி
சர்வதேச அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதனால் உலக பொருளாதாரம், அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு, சர்வதேச பங்குச் சந்தைகளின் முதலீடு ஆகியன தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே, தங்கத்தின் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. சர்வதேச நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு காரணம் என பொருளாதார மற்றும் நிதி வல்லுநர்கள் கூறி உள்ளனர்.

வாரத்தின் முதல் நாளில்...
சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வை கண்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று, பிப்ரவரி 9ஆம் தேதி, தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650 க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை ஆனது.

ரூ.15,000 உயர்ந்த வெள்ளி
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை ஆனது. தங்கம், வெள்ளியின் விலை அதிரடியாக அதிகரித்திருப்பது, பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
இன்றைய ராசி பலன்கள் 09022026

இன்றைய ராசி பலன்கள் 09022026

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
7 hrs 7 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved