Also Watch
Read this
மனித வரலாற்றிலேயே கண்டிராத அளவுக்கு, கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அதி தீவிர எல் நினோ காலநிலை மாற்றம் இந்த 2026ஆம் ஆண்டில் உலக நாடுகளை உலுக்கத் தொடங்கியுள்ளது.

150 ஆண்டுகளில்...
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ’இது கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்த நிலையில், எல் நினோ நடப்பாண்டில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை கடுமையான வெப்ப அலைகள் தாக்கியுள்ளன. இந்தியாவின் பருவமழைக்கான இயல்புநிலை சீர்குலைந்துள்ளது. பெருமளவிலான காட்டுத்தீ மற்றும் வெள்ளப்பெருக்குகள் உலகின் பல பகுதிகளைச் சூறையாடியுள்ளன.

உயரும் வெப்பநிலை
Copernicus காலநிலை மாற்ற மையத்தின் தரவுகளின்படி, ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தொட்டதால், பதிவுகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 2026 ஆகஸ்ட் மாதமே மிக வெப்பம மயமான ஆகஸ்ட் ஆக பதிவாகியுள்ளது. மேலும், 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் உலகளாவிய சராசரி வெப்பநிலை, சராசரி அளவை விட 1.22 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

அசாதாரணமானது...
ஒவ்வொரு எல் நினோவும் செப்டம்பர் பாதியைக் கடந்த பிறகு மேலும் தீவிரமடைவது வழக்கமானது தான். எல் நினோ பொதுவாக குளிர்கால மாதங்களான நவம்பர் அல்லது டிசம்பரிலேயே உச்சமடையும். ஆனால், இந்தாண்டில், ஆண்டின் தொடக்கத்திலேயே முன்கூட்டியே இது போன்ற தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் அசாதாரணமானது என்ற கவலை எழுந்துள்ளது.

கடும் குளிர், வறட்சி
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, உலக வானிலை அமைப்பு மற்றும் சர்வதேச காலநிலை நிபுணர்கள், இந்த எல் நினோ ஆண்டின் பிற்பகுதியில் மேலும் வலுவடையும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளையும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதன் காரணமாக அமெரிக்காவில் கடுமையான குளிர்காலம் நிலவும் என்றும், கலிபோர்னியா, நெவாடா, யூட்டா, கொலராடோ, நியூ மெக்சிகோ மற்றும் அரிசோனா ஆகிய 6 மாநிலங்களில் அபாயகரமான அளவுக்குக் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்றும், அதேவேளையில் நாட்டின் பிற மாநிலங்கள் வறண்டு காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாகவில்லை...
மறுபுறம், இந்த எல் நினோ காரணமாக நடப்பு புயல் பருவத்தில் செப்டம்பர் 15 வரை எந்தவொரு பெரிய அட்லாண்டிக் சூறாவளிப் புயலும் உருவாகவில்லை.

NOAA தரவுகளின்படி, 1966ஆம் ஆண்டிற்குப் பிறகு அட்லாண்டிக் பெருங்கடலில் புயல்கள் ஏதுமின்றி இவ்வளவு நீண்ட இடைவெளி நிலவுவது இதுவே முதல்முறையாகும்.

உலக வானிலை எச்சரிக்கை
கடந்த ஜூன் மாதத்தில் துவங்கிய இந்த எல் நினோ, வரும் மாதங்களில் மேலும் தீவிரமடைந்து மழைப்பொழிவு, வெப்பநிலை, வெள்ளம், வறட்சி மற்றும் தீவிர வெப்ப அலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

இயற்கை சவால்கள்
மேலும், இந்த எல் நினோ நிகழ்வு கிட்டத்தட்ட 100 சதவீத உறுதியுடன் வரும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என்றும் WMO கணித்துள்ளது.

இந்த காலநிலை மாற்றம், உலகளவில் பெரும் இயற்கை சவால்களை உருவாக்கவுள்ளது.

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? என்பதுதான் மனித குலத்தின் முன் இருக்கும் பெரிய சவாலாக இருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved