news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஆட்டின் உடலை இறுக்கமாக சுற்றிய மலைபாம்பு
tv

Also Watch

tv

Read this

ஆட்டின் உடலை இறுக்கமாக சுற்றிய மலைபாம்பு

மதீனா நகர், கோவை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விழுங்க முயன்ற மலைப்பாம்பு

உடலை இறுக்கமாக சுற்றிய மலைபாம்பு :

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட மதீனா நகர் பகுதியில் ஆட்டை சுற்றி வளைத்து பிடித்து விழுங்க முயன்ற பதினைந்தடி நீள மலைப்பாம்பை மீட்ட பாம்பு பிடி வீரர்கள் அதனை மேட்டுப்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதீனா நகர் பகுதியில் மேய்ச்சலில் இருந்த ஆடு ஒன்றை பெரிய மலைப்பாம்பு ஒன்று வளைத்து பிடித்து விழுங்க முயற்ச்சித்து வருவதை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து பாம்பு பிடி வீரர் வொயிட் பாபு என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தனது உதவியாளர் உஸ்மான் உடன் சென்ற பாம்பு பிடி வீரர் மலைப்பாம்பை லாகவமாக ஆட்டின் உடலில் இருந்து பிரித்து பாம்பு தப்பி ஓடாத வகையில் மீட்டார்..ஆனால் உடல் நசுங்கிய நிலையில் ஆடு பரிதாபமாக உயிரியிழந்து விட்டது.

மீட்கப்பட்ட மலைப்பாம்பை பாம்பு பிடி வீரர் வொயிட் பாபு மேட்டுப்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் மலைப்பாம்பு வனத்துறையினரால் பாதுகாப்பாக அடர்ந்த காட்டு பகுதியில் விடுவிக்கப்பட்டது..மேட்டுப்பாளையம் நகர பகுதியில் குடியிருபபுகள் நிறைந்த இடத்தில் பதினைந்தடி நீள பிடிப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
போட்டி போட்டுக்கொண்டு காளைகளை அடக்கிய வீரர்கள்

போட்டி போட்டுக்கொண்டு காளைகளை அடக்கிய வீரர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்

1
7 mins agoshare
ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved