news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,240
tv

Also Watch

ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,240

ஒரு கிராம் வெள்ளி ரூ.280

75

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில், வெள்ளியின் விலை, ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 20,000 ரூபாய் சரிந்த நிலையில் 2 லட்சத்து 80,000 ரூபாயாக இருந்தது.

உயர்ந்து வரும் தங்கம்
சமீப காலமாக, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. ஆறுதல் தரும் விதமாக, கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. கடந்த 2 நாளில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.15,200 குறைந்து சனிக்கிழமை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19,200க்கு விற்பனை ஆனது. தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்று, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு கிராமுக்கு ரூ.950 குறைந்து, ரூ.13,950-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்பனை ஆனது.

இன்றைய விலை நிலவரம்
இன்று பிப்ரவரி 3ஆம் தேதி, தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12,240க்கும், ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கும் விற்பனை ஆனது.

வெள்ளி விலை குறைவு
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.280க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.2 லட்சத்து 80,000 ஆக இருந்தது.

Related Link
இன்றைய ராசி பலன்கள் 03022026

இன்றைய ராசி பலன்கள் 03022026

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நவம்பர் 4-ல் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved